மெஹந்தி திருவிழாவில் வருங்கால கணவர், குடும்பத்தினர், நண்பர்களுடன் ஹன்சிகா உற்சாகம் : இன்னிசை பாடலுக்கு அசைவு கொடுத்து அசத்திய ஹன்சிகா, கதுரியா வீடியோ இணையத்தில் வைரல்

Dec 3 2022 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சின்ன குஷ்பூ ஹன்சிகாவுக்கு வரும் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மெஹந்தி திருவிழா களைகட்டியது... மெஹந்தி வர்ணம் தீட்டப்பட்ட ஹன்சிகாவின் கைகள் சிவந்ததுடன், வெட்கத்தில் அவரது கன்னங்களும் சிவந்த வீடியோ இணைய உலகில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு முன்பு நடைபெற்ற மெஹந்தி திருவிழாவில் ஹன்சிகாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். மெஹந்தி விழாவில் ஹன்சிகாவின் கரங்களில் மெஹந்தி வண்ணங்கள் தீட்டப்பட்ட நிலையில், அருகே அமர்ந்த வருங்கால கணவர் சோஹேல் கதுரியா ஹன்சிகாவின் அழகை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் இன்னிசை பாடல் ஒலிபரப்பாக திருமண உற்சாகத்தில் இருந்த ஹன்சிகா பஞ்சாபி நடன அசைவுகளை தர, கதுரியாவும் தன்பங்குக்கு தோள்களை அசைத்து ஆடிக்காட்டினார்.

மொத்தத்தில் ஹன்சிகாவின் மெஹந்தி திருவிழா வீடியோ அவரது ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளது என்றால் அது மிகையல்ல... வரும் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டட்டா கோட்டை மற்றும் அரண்மனையில் ஹன்சிகாவுக்கும், சோஹேல் கதுரியாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது....
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00