வரும் 10-ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது ரஜினியின் பாபா திரைப்படம் : திரைக்கதை, வசனம் மற்றும் கலர் கிரேடிங்கில் மாற்றத்துடன் வெளியாகிறது
Dec 7 2022 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஜினியின் பாபா திரைப்படம் வரும் 10-ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் பாபா. ரஜினி திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகிய இப்படம் மிகப்பெரும் தோல்விப் படமாக அமைந்தது. ஆன்மிகத்தையும் அரசியலையும் குழப்பி எடுத்து தன் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கி விட்டார் ரஜினி என்ற விமர்சனம் எழுந்தது. விநியோகஸ்தர்களை தன் வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு நஷ்டஈடாக கணிசமான தொகையை திருப்பிக் கொடுத்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் தற்போது இப்படத்தின் திரைக்கதை, வசனத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வரும் 10-ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. பிலிமில் படம்பிடிக்கப்பட்ட இப்படம் தற்போது கலர் கிரேடிங், சவுண்ட் எஃபக்ட் உடன் ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் உற்சாமடைந்துள்ளனர்.