நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி : புட்பால் மைதானத்தில் மகன் ஆத்விக்குடன் இருக்கும் புகைப்படம் வைரல்
Mar 17 2023 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புட்பால் மைதானம் ஒன்றில் தனது மகன் ஆத்விக் மற்றும் கணவர் அஜித்குமாருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷாலினி இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார். துணிவு படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார். அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுப்பயணம், பைக் ரைட் என பிசியாக இருக்கிறார். சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களை மனைவி ஷாலின்தான் அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அந்த வகையில் ஷாலினி வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வரும் நிலையில் ஆத்விக் ஒரு மிகப்பெரிய கால்பந்து வீரர் ஆவார் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.