இந்தியாவில் வரும் 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஜப்பான் திட்டம் - புல்லட் ரயில் திட்ட தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்து

Sep 1 2014 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் பிரமதர் ஷின்ஜோ அபே-வுடன் பிரதமர் நரேந்திரமோதி நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவில், வரும் 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய ஜப்பான் முன் வந்துள்ளது.

அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திரமோதி, டோக்கியோ நகரில், அந்நாட்டு பிரதமர் Abe-வை சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இரு நாட்டு நல்லுறவு, வர்த்தகம், மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த இந்திய - ஜப்பான் பிரதமர்கள், இரு நாடுகளுக்கிடையே, பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் விவரங்கள் குறித்து விளக்கினர். அப்போது பேசிய பிரதமர் திரு. நரேந்திரமோதி, இந்தியா வளர்ச்சிக்கு, ஜப்பான் பெரிதும் உறுதுணையாக இருந்து வருவதாகவும், பல்வேறு துறைகளில் ஜப்பான் முதலீடு செய்ய முன் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தையில், புல்லட் ரயில்களை அறிமுகம் செய்வதற்குத் தேவையான நிதி, தொழில் நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆதரவு ஆகிய அனைத்தையும் வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாகவும், மேலும், இந்தியாவில் வரும் 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நவீன நகரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக முதலீடு செய்ய ஜப்பான் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00