கேரளாவில் பெய்த கனமழையின் விளைவு - பருவமழை மாற்றத்தை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என ஐ.நா எச்சரிக்‍கை

Sep 26 2018 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்‍கும் நடவடிக்‍கைகளை, உலக நாடுகள் துரிதமாக எடுக்‍க வேண்டும் என்பதை கேரள பெருமழை உணர்த்தியுள்ளதாக ஐக்‍கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்‍கூட்டத்தில் உரையாற்றிய அதன் பொதுப்பேரவை தலைவர் மரியா ஃபெர்னாண்டா, ஆகஸ்டு மாதம் கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தான் நேரில் பார்வையிட்டதாகவும், கேரள வெள்ளம் இந்த நூற்றண்டின் மிகப் பெரிய பேரழிவுகளில் ஒன்று என்றும் கூறினார்.

பருவநிலை மாற்றத்துக்‍கு எடுத்துக்‍காட்டாக கேரள வெள்ளம் இருப்பதாகக்‍ தெரிவித்த அவர், புவியை பாதிக்‍கும் நடவடிக்‍கைகளை உலக நாடுகள் குறைக்‍க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்‍கும் நடவடிக்‍கைகளை உலக நாடுகள் துரிதமாக எடுக்‍கத்தவறினால், இதையும் தாண்டி மிகப் பெரிய அழிவுகளை, நாடுகள் சந்திக்‍க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00