'டிட்லி' புயலால், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் 8 பேர் பலி : 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

Oct 12 2018 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கக் கடலில் உருவான 'டிட்லி' புயலால், ஆந்திரா - ஒடிசா மாநிங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

வங்கக் கடலில் உருவான, 'டிட்லி' புயல், ஒடிசா மாநிலத்தின், கோபால்பூர் மற்றும் ஆந்திர மாநிலத்தின், பலசா இடையே, நேற்று கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 150 - 164 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த சூறைக்காற்று வீசியது. புயலின் தாக்கத்தால், ஒடிசா மாநிலத்தின், கஞ்ஜம், கஜபதி ஆகிய மாவட்டங்களில், பலத்த மழை பெய்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில், மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால், சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. எட்டு மாவட்டங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதேபோல், ஆந்திர மாநிலத்திலும் பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்றால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். சாலையோரங்களில் விழுந்த மரங்களை அகற்றும் பணி, சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டிட்லி புயலால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00