குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் : சோனியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தீர்மானம்

Jan 14 2020 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான தயாரிப்புப் பணிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்‍கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

நாட்டின் அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி தலைமையில் டெல்லியில் எதிர்க்‍கட்சிகளின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், திரு.ராகுல் காந்தி, திரு.குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு.சரத்பவார், மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் - தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கான தயாரிப்புப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்றும், ஏழைகள், சமூகத்தில் பின்தங்கியவா்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மொழி மற்றும் மத ரீதியிலான சிறுபான்மையினர் ஆகியோரைக் குறிவைத்து மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00