வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்ட நபர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியுமா? - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கேள்வி

Jan 23 2020 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்ட நபர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியுமா என மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில், அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, 4 கிலோமீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டார். பின்னர், பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், வெளிநாட்டைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்ட ஒருவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற அனுமதிக்கப்படுவாரா? என கேள்வி எழுப்பினார். இதற்கு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறினார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என தெரிவித்த அவர், மாநிலத்திலிருந்து தன்னை வெளியேற்றினால் மட்டுமே குடிமக்களை வெளியேற்ற முடியும் எனக் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00