வரும் 31ல் தொடங்குகிறது மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் : சி.ஏ.ஏ., - என்.பி.ஆர்., விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Jan 23 2020 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட‌ விவகாரங்களை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொ‌டர் வரும் 31-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 1-ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ் உள்ளி‌ட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதே போல், நாட்டின் பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பிரச்சனை எழுப்ப ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் திட்டுமிட்டுள்ளன. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 42 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க., அரசு தி‌ட்டமிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00