குரேகான் பீமா கலவர வழக்கை மீண்டும் மறு ஆய்வு செய்ய மகாராஷ்டிர மாநில அரசு நடவடிக்கை

Jan 23 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

குரேகான் பீமா கலவர வழக்கை மீண்டும் மறு ஆய்வு செய்ய மகாராஷ்டிர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, புனே அருகில் குரேகான் பீமா என்ற இடத்தில் மராட்டிய மன்னர் பெஷாவா பாஜிராவ் படைகளை ஆங்கிலேய படையிலிருந்த தாழ்த்தப்பட்டோர் படைப்பிரிவு விரட்டியடித்ததை ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தில் இந்துத்துவா இயக்கத்தினர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, புனே மற்றும் மும்பையில் கலவவரம் வெடித்தது.

இதில், குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக, நகர்ப்புற நக்சலைட்டுகள் இந்த கலவரத்தை தூண்டியதாக கவுதம் நவலேகா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த கலவர வழக்குகளை ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரிக்க வேண்டுமென சரத்பவார் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து, இந்த கலவர வழக்கில் தற்போதைய நிலை குறித்து, துணை முதலமைச்சர் திரு.அஜித் பவார் மற்றும் உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக் ஆகியோரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00