காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்‍குகள் : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Jan 23 2020 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்‍குகளை, அதிக எண்ணிக்‍கை கொண்ட நீதிபதிகள் அமர்வுக்‍கு மாற்றுவது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்‍கும் 370-வது சட்டப்பரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்‍கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளதற்கு எதிராகவும், ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும், காங்கிரஸ் மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டுக்‍ கட்சி, ஜம்மு-காஷ்மீர் மக்‍கள் மாநாடு ஆகியவற்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்‍குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்‍குகளை ஒன்றிணைத்து விசாரிக்‍க, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்நிலையில், இவ்வழக்‍குகளை, மேலும் அதிக எண்ணிக்‍கை கொண்ட நீதிபதிகள் அமர்வுக்‍கு மாற்றுவது தொடர்பான விசாரணை இன்று நிறைவுபெற்று, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00