நாட்டின் 71-வது குடியரசு தின விழா கோலாகலக்‍ கொண்டாட்டம் - டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் ‍கோவிந்த்

Jan 26 2020 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் 71வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத்கோவிந்த் தேசியக்‍ கொடியை ஏற்றிவைத்தார்.

நாட்டின் 71வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத்கோவிந்த் தேசியக்‍ கொடியை ஏற்றிவைத்தார்.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக Brazil அதிபர் Jair Bolsonaro கலந்துகொண்டார். குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் மற்றும் Jair Bolsonaroவை பிரதமர் திரு.நரேந்திரமோதி வரவேற்றார். முப்படைத் தலைமைத் தளபதி, ராணுவத் தளபதி உள்ளிட்டோர் பிரசில் அதிபருக்‍கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ராஜபாதையில் நடைபெற்ற பீரங்கி உள்ளிட்ட ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் முப்படைகளின் அணிவகுப்பை, குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத்கோவிந்த் ஏற்றுக்‍கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாணாக்‍கர்களின் கலை நிகழ்ச்சி, ராணுவ வீரர்களின் விமான சாகச நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில், குடியரசு துணைத்தலைவர் திரு.வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன்சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, முப்படை தலைமைத் தளபதி திரு.பிபின்ராவத், ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் Manoj Mukund Narawane உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் ஆயிரக்‍கணக்‍கானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, போர் நினைவிடத்தில் பிரதமர் திரு.நரேந்திரமோதி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் ஆகியோர் போரில் உயிர்நீத்தவர்களுக்‍கு மரியாதை செலுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00