குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக 4வது மாநிலமாக மேற்கு வங்க சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றம் - அனைத்து கட்சிகளும் பாசிச பா.ஜ.க.விற்கு எதிராக போராட வேண்டுமென முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

Jan 27 2020 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக, 4-வது மாநிலமாக மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை, தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி.மம்தா பானர்ஜி, இச்சட்டத்தை தங்களது மாநிலத்திற்குள் செயல்படுத்த மாட்டோமென உறுதிபடத் தெரிவித்து வருகிறார். இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டசபையில், தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய செல்வி.மம்தா பானர்ஜி, அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அனைத்து கட்சிகளும் பாசிச பா.ஜ.க. விற்கு எதிராக போராட வேண்டுமென அழைப்பு விடுத்தார். ஏற்கனவே கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00