ஆந்திர மாநில சட்ட மேலவையை கலைக்கும் முடிவு - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

Jan 28 2020 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநில சட்ட மேலவையை கலைப்பது தொடர்பாக, அம்மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்களை அமைப்பதற்கான மசோதா, ஆந்திர மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மேலவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், சட்டமேலவையில் தெலுங்குதேசம் கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், அதிருப்தியடைந்த முதலமைச்சர் திரு.ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவுக்கு சட்டமேலவையே தேவையில்லை என்றும், அதை ரத்து செய்யப்போவதாகவும் அறிவித்தார்.

மேலவை கலைக்கும் முடிவுக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சூழலில், மேலவையை கலைப்பது தொடர்பாக, நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் போடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் அவையை புறக்கணித்தனா். இதையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00