ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவோருக்‍கு, நிலுவையில் உள்ள கடனில், 40 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

Jan 28 2020 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவோருக்‍கு, நிலுவையில் உள்ள கடனில், 40 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் 8 ஆயிரத்து 556 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இதனால், ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும், அதன் இணைப்பு நிறுவனமான AIXL மற்றும் AISATS-ன் 50 சதவீத பங்குளையும் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அண்மையில் உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழுக்‍கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவன பங்குகளை வாங்க விரும்பும் நிறுவனங்களை தேர்வு செய்யவும், பங்குகள் விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஏர் இந்தியா பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்‍கப்பட்டது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவோருக்‍கு, நிலுவையில் உள்ள கடனில், 40 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00