காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் குடியமர்த்துவோம் : பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

Jan 28 2020 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை, ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் குடியமர்த்துவோம் என்றும், அதனை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியில் திரு. ராஜ்நாத் சிங் உரையாற்றினார். எந்தவொரு மதத்தின் உணர்வுகளையும் புண்படுத்துவதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றும், மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்காகவே சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தியே ஆக வேண்டும் என்றும், அதனை மறுக்‍க எந்த மாநில அரசுக்‍கும் உரிமை இல்லை என்றும் தெரிவித்தார்.

காஷ்மீரில் இருந்து கடந்த 1990-ம் ஆண்டு, தீவிரவாத அச்சுறுத்தலால் வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிட்களை, மீண்டும் ஜம்மு காஷ்மீரில் குடியமர்த்துவோம் எனக்‍ கூறிய திரு. ராஜ்நாத் சிங், அதனை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00