பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் அனுபவிக்‍கும் துன்புறுத்தல்கள் குறித்து எதிர்க்‍கட்சிகள் பேச மறுப்பது ஏன்? : பிரதமர் நரேந்திர மோதி கடும் விமர்சனம்

Jan 28 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் அனுபவிக்‍கும் துன்புறுத்தல்கள் குறித்து பேச மறுப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி, எதிர்க்‍கட்சிகளை விமர்சித்தார்.

தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் திரு. மோதி, என்.சி.சி. படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் உரையாற்றிய பிரதமர், அரசியல் சட்டத்தில் நம்பிக்கை இல்லாத தீவிரவாத அமைப்புகள் வடகிழக்கு மாநிலங்களில் உருவாகி உள்ளதாகவும், ஆனால், போடோலாந்து ஜனநாயக முன்னணியுடன் வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடு நேற்று கையெழுத்தானதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இங்கு போராடுபவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் அனுபவிக்‍கும் துன்புறுத்தல்கள் குறித்து பேச மறுப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். நம் அண்டை நாட்டுடன் போர் ஏற்பட்டால், 10-லிருந்து 12 நாட்களுக்‍குள் அவர்களை வீழ்த்திவிடலாம் என்றும், இதுவரை நடைபெற்ற போர்களில், 3 முறை அவர்கள் நம்மிடம் தோல்வி அடைந்துள்ளதாகவும், பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00