இந்திய வங்கிகளில் வாங்கிய கடன்தொகை முழுவதையும் வங்கிகள் எடுத்துக் கொள்ளலாம் : நாடு கடத்தக்‍கோரும் மேல்முறையீட்டு வழக்‍கில் விஜய் மல்லையா உருக்‍கம்

Feb 14 2020 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய வங்கிகளில் தான் வாங்கிய கடன்தொகையை 100 சதவீதம் முழுவதையும் வங்கிகள் எடுத்துக் கொள்ளலாம் என தொழிலதிபர் விஜய் மல்லையா மன்றாடிக்‍ கேட்டுக்‍ கொண்டுள்ளார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா, 9 ஆயிரம் கோடி வங்கி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ., அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விசாரணை தொடங்கிய நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றார். தற்போது, லண்டனில் வசித்து வரும் அவரை நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்றதோடு, நாடு கடத்தும் தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தார். கடந்த 3 நாட்களாக நடந்த இந்த வழக்கின் இறுதி வாதம் நேற்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் Stephen Irwin, நீதிபதி Elisabeth Laing ஆகியோர் அடங்கிய அமர்வு, 'சிக்கலான இந்த வழக்கின் தீர்ப்பு வேறொரு நாளில் அறிவிக்கப்படும் என அறிவித்தது. இந்த விசாரணைக்கு மல்லையா ஆஜராக தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தபோதும், அவர் 3 நாட்களும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரணையை பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்தவிதமான பண மோசடியிலும் ஈடுபடவில்லை என்றும், இந்திய வங்கிகளிடம் தான் மன்றாடிக் கேட்டுக் கொள்வதாகவும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய அசல் தொகையில் 100 சதவீத பணத்தையும் தான் திரும்பக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00