தொலைத் தொடர்பு நிறுவனங்கள், நிலுவை தொகையை உடனடியாக செலுத்த மத்திய அரசு உத்தரவு : பிப்ரவரி 20-ம் தேதிக்குள் பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்துவதாக ஏர்டெல் நிறுவனம் பதில்

Feb 15 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
நிலுவை தொகையை வசூலிக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அனைத்து தொலைத் தொடா்பு நிறுவனங்களும், தங்கள் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொலைத் தொடர்பு கொள்கையின்படி, வருவாயின் ஒரு பகுதியை, தொலைத் தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், முன்னணி நிறுவனங்களான, பார்தி ஏர்டெல், வோடபோன் - ஐடியா ஆகியவை, வருவாயை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தன. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 92 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் செலுத்த, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, உத்தரவிட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அபராதம் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களது உத்தரவு நிறைவேற்றப்படாததற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக, சம்பந்தப்பட்ட மத்திய தொலை‌த் தொ‌டர்பு அதிகாரியை சிறைக்கு அனுப்ப நேரிடும் என்று எச்சரித்து, வழக்கு விசாரணையை, வரும் மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டிப்பால், நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய தொலைத் தொடா்புத் துறை, சுற்றறிக்கை அனுப்பியது. இதில், ஏர்டெல் நிறுவனம், வரும் 20-ஆம் தேதிக்குள் பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மாா்ச் 17-ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும், பதிலளி்த்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00