மத நல்லிணக்க ஒருமைப்பாட்டுடன் மக்கள் வாழ்வதற்கு, உலகளவில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு

Feb 17 2020 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத நல்லிணக்க ஒருமைப்பாட்டுடன் மக்கள் வாழ்வதற்கு, உலகளவில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது என்று, குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், ரோட்டரி இன்டர்நேஷனலின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய, குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்ய நாயுடு, பன்முகத்தன்மை, பன்மைத்துவ நெறிமுறைகள், அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் நல்லிணக்கத்துடன் சேர்ந்து வாழ்வது ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக, உலகளவில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது என்று தெரிவித்தார்.

பயங்கரவாதம் என்பது, மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி என்றுக் குறிப்பிட்ட அவர், அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவையே விரும்புகிறது என்றும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு சக்திக்கும் எதிராக போராட, சர்வதேச சமூகம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்ய நாயுடு கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00