டெல்லி முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் - கட்சி, ஜாதி, மத பேதமின்றி மக்களுக்காக பாடுபடப் போவதாக உறுதி

Feb 17 2020 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி முதலமைச்சராக, தொடர்ந்து மூன்றாவது முறையாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்.

சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமான டெல்லியில், 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த 8-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, 70 தொகுதிகளில் 62-ல் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக, திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், திரு. அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து மூன்றாவது முறையாக, திரு. அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். அவருக்கு, துணைநிலை ஆளுநர் திரு. அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, திரு. Manish Sisodia, திரு. Satyender Jain, திரு. Gopal Rai, திரு. Kailash Gehlot, திரு. Imran Hussain, திரு. Rajendra Gautam ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்‍ கொண்டனர். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில், திரு. அரவிந்த் கெஜ்ரிவால் போல் வேடமணிந்த குட்டி கெஜ்ரிவால் என்ற சிறுவன், பதவியேற்பு விழாவில் பங்கேற்றான். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். எனினும், சிறுவனை ​டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00