எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்- பிரதமர் நரேந்திர மோதி திட்டவட்டம்

Feb 17 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறப்போவதில்லை என்று, பிரதமர் திரு. நரேந்திர மோதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி நேற்று சென்றார். வாரணாசியில், ஜன சங்கத் தலைவர் தீனதயாள் உபத்யாயா நினைவில்லத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு. மோதி, அங்கு அமைக்கப்பட்டுள்ள 63 அடி உயர தீனதயாள் உபத்யாயாவின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, வாரணாசியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோதி, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதும், குடியுரிமை திருத்தச் சட்டமும் நாட்டு நலனுக்கு அவசியமான நடவடிக்கைகள் என்றும், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் 370-வது பிரிவு நீக்கத்தை திரும்பப்பெற போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நாட்டில் முதன்முறையாக தேசிய தளவாட கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் வணிகத்தை எளிதாக்குவதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஜி.எஸ்.டி., கொண்டு வந்துள்ளதாகவும், பிரதமர் மோதி கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00