மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோ தாங்கள் வெளியிடவில்லை : ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் அறிவிப்பு

Feb 17 2020 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாணவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோவை, தாங்கள் வெளியிடவில்லை என்று, ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகம் அருகே, 2019 டிசம்பர் மாதம் 15-ம் தேதி நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த டெல்லி போலீசார், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், அங்கு புத்தகம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது, சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள் மீதான இந்த கொடூரத் தாக்குதலுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வீடியோ குறித்து, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் புதிய வீடியோவை தாங்கள் வெளியிடவில்லை என்றும், ஜாமியா ஒருங்கிணைப்பு குழுவுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00