சி.ஏ.ஏ., காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் டிரம்ப் பேசவிருப்பதாக தகவல் -இந்தியாவிற்கு காத்திருக்‍கும் புதிய சர்ச்சை

Feb 22 2020 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய வருகையின்போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்‍கள் பதிவேடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, பிரதமர் திரு. நரேந்திர மோதியுடன், அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் விவாதிப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப், வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி, இரு நாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில், அமெரிக்‍காவுக்‍கு எதிராக அதிக இறக்‍குமதி வரி விதிக்‍கும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக கூறி, டிரம்ப், பரபரப்பை ஏற்படுத்தினார். பிரதமர் திரு. மோதி தனக்‍கு நல்ல நண்பர் என்றாலும், வர்த்தகம் குறித்து அவருடன் முக்‍கிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்‍கள் பதிவேடு ஆகியவை, இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களை, நாடு அற்றவர்களாக மாற்றக் கூடும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்​நிலையில், இந்திய வருகையின்போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்‍கள் பதிவேடு, காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, பிரதமர் திரு. நரேந்திர மோதியுடன், அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் விவாதிப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00