அயோத்தி அருகே மசூதி கட்ட உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய 5 ஏக்‍கர் நிலத்தை ஏற்றது சன்னி வக்ஃபு வாரியம்

Feb 22 2020 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

அயோத்தி தீர்ப்பில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம் ஏற்றது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்‍க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. அதே நேரம், மசூதி கட்டுவதற்காக, சன்னி வக்பு வாரியத்துக்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தருமாறு மத்திய அரசுக்‍கு உத்தரவிட்டது. இதையடுத்து, மசூதிக்‍கு நிலத்தை தேர்வு செய்யுமாறு உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அயோத்தி மாவட்டம் சோஹாவல் தாலுகா தன்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கி கொடுத்தது. இந்த நிலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சன்னி வக்பு வாரியத்தை சில அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதாக சன்னி வக்ஃபு வாரியம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்‍கு கட்டுப்படுவோம் என்று ஆரம்பத்தில் இருந்தே தாங்கள் கூறி வருவதாகவும், எனவே, நிலத்தை ஏற்றுக்கொள்வதை தவிர, தங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00