2 நாள் சுற்றுப் பயணமாக நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் : குஜராத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Feb 23 2020 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

2 நாள் சுற்றுப் பயணமாக நாளை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட உள்ளார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிபராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக டொனால்ட் டிரம்ப் நாளை வருகிறார். அவருடன் மனைவி Melania-வும் வருகிறார். 'ஏர்போர்ஸ் ஒன்' விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திற்கு நாளை பகல் 12.30 மணிக்கு வரும் அவரை, பிரதமர் திரு.மோதி நேரில் சென்று வரவேற்கிறார். டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகிய இருவரும் இணைந்து உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட உள்ளனர். இதனையொட்டி, புனரமைக்கும் பணிகள் நடைபெற்று தாஜ்மஹால் தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. மேலும் ஆக்ராவில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு அளிப்பதற்காக தங்கம் வெள்ளியிலான பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அருண் பாபுவால் என்ற தங்க நகை வர்த்தகர், சிறப்பான வேலைப்பாடுகளுடன் இந்த பாத்திரங்களை தயாரித்துள்ளார்.

இப்பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே மிகப்பெரியவர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, மோதி - டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00