கல்வி உரிமைகளை நசுக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராட மாணவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது : ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயூஷ் கோஷ்

Feb 23 2020 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

கல்வி உரிமைகளை நசுக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராட மாணவர்களுக்‍கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக, ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயூஷ் கோஷ் தெரிவித்தார்.

அனைவருக்குமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டும், கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்கக்கூடாது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆயுஷ் கோஷ், கல்வி உரிமைகளை நசுக்கும் எந்த முயற்சியையும் எதிர்த்து போராட அனைத்து உரிமைகளும் மாணவர்களுக்‍கு இருப்பதாகத் தெரிவித்தார்.

கல்வி என்பது விற்கப்படும் வியாபார பண்டம் அல்ல - அது ஒவ்வொருவரின் உரிமை என கூறிய ஆயுஷ் கோஷ், ஆங்கிலேயே காலனி ஆதிக்கத்தில் இந்தியா அடிமை பெற்றிருந்ததைப் போன்று, தாங்கள் அடிமையாக இருக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். மாணவர்கள் போராட்டம் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்‍கு பதிலளித்த ஆயுஷ் கோஷ், அரசியலமைப்பு மற்றும் கல்வியைப் பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களுக்‍கு இருப்பதை ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00