. உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா? - இந்திய புவியியல் ஆய்வு மையம் புதிய விளக்கம்

Feb 23 2020 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா என்பது குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 350 டன் தங்கம் நிலத்தடியில் உள்ளதாக வெளியான செய்தி குறித்து இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் தங்கம் இருப்பது தொடர்பான செய்தி வெளியானதற்கும் புவியியல் ஆய்வு மையத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. சோன்பத்ரா மாவட்டத்தில் இது போல் பெரிய அளவு தங்கம் இருப்பதாக தாங்கள் எந்த ஆய்வும் நடத்தவில்லை என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தங்கம் இருப்பு குறித்து பல ஆய்வுகளை நடத்தியுள்ளதாகவும், ஆனால் அதன் முடிவுகள் சோன்பத்ராவில் இந்த அளவு தங்கம் இருப்பதை உறுதி செய்யவில்லை என்றும் இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.

1998-99 மற்றும் 1999-2000 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் புவியியல் ஆய்வு இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில், சோன்பத்ரா மாவட்டத்தில் தாதுப்பொருட்கள் 52 ஆயிரத்து 806 புள்ளி 25 டன் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளது. ஒரு டன் தாதுப் பொருளில் சராசரியாக 3 புள்ளி 03 கிராம் தங்கம் மட்டுமே கிடைக்கும் என்றும், அதன்படி அங்கு இருக்கும் தாதுப்பொருளில் சுமார் 160 கிலோ அளவிலான தங்கம்தான் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. ஊடகங்களில் வெளியானதுபோல 3 ஆயிரத்து 350 டன் தங்கம் அல்ல என்றும் இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00