அதிபர் டிரம்பிடம் H1B விசா, வர்த்தக சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி பேச்சுவார்த்தை நடத்துவாரா? : காங்கிரஸ் கேள்வி

Feb 24 2020 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்பிடம், H1B விசா, வர்த்தக சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட முக்‍கிய பிரச்னைகள் குறித்து, பிரதமர் திரு. நரேந்திர மோதி, பேச்சுவார்த்தை நடத்துவாரா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து, பிரதமர் திரு. மோதியிடம் காங்கிரஸ் சார்பாக பல்வேறு கேள்விகள் முன்வைக்‍கப்பட்டுள்ளன. H1B விசா எண்ணிக்‍கை, இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சிறப்பு அந்தஸ்து ஏன் ரத்து செய்யப்பட்டது? அமெரிக்காவின் நெருக்கடியால், ஈரானிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், குறைந்த விலையில் அமெரிக்காவிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்‍குமா? அமெரிக்‍காவில் இந்தியர்களின் வேலைவாய்ப்பு, தலிபான்களால் இந்தியாவுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்து, டிரம்ப் உடனான சந்திப்பின்போது, பிரதமர் திரு. மோதி பேசுவாரா என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரு. ரனதீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00