இந்தியாவின் ஒற்றுமையும், வளர்ச்சியும், உலக நாடுகளுக்‍கு முன்னுதாரணம் : அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப் உரை

Feb 24 2020 9:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - அமெரிக்‍கா இடையே, நாளை, 3 பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளதாக கூறினார். இந்திய மக்‍கள் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் மரியாதை காரணமாகவே, அமெரிக்காவிலிருந்து 8 ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்து, தானும், தனது மனைவி மெலனியாவும் வந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், கோடிக்கணக்‍கான இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும், இந்தியாவின் ஒற்றுமையும், வளர்ச்சியும், உலக நாடுகளுக்‍கு முன் உதாரணமாக திகழுவதாகவும் கூறினார்.

பிரதமர் மோதி தனது உண்மையான நண்பர் என்றும், இந்த இனிய வரவேற்பை ஒருபோதும் மறக்‍க முடியாது என்றும் தெரிவித்தார். மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதாக தெரிவித்த ட்ரம்ப், சுவாமி விவேகானந்தரை மேற்கோள்காட்டி பேசினார். கிரிக்‍கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை, உலகிற்கு தந்த நாடு இந்தியா என்றும், பாலிவுட் படங்களைப் பார்த்து உலக மக்‍கள் மகிழ்ச்சி அடைவதாகவும், தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகள் அமெரிக்‍காவில் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.

தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டின் உரிமை என்று தெரிவித்த ட்ரம்ப், தீவிரவாத ஒழிப்பு குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். ஐ.எஸ். தீவிரவாத இயக்‍கத்தின் நடவடிக்‍கை ஒடுக்‍கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவுக்‍கு அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்‍கா தயாராக இருப்பதாகவும், 3 பில்லியன் டாலர் மதிப்பில், இரு நாடுகள் இடையே, நாளை, ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும், அமெரிக்‍கா ட்ரம்ப் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00