உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்களில் டெல்லிக்கு முதலிடம் - அதிக மாசு உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு 5-ம் இடம்

Feb 26 2020 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அதிக மாசு உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது.

IQ Air Visual என்ற அமைப்பு, `உலக காற்று தர அறிக்கை - 2019' -ஐ அடிப்படையாக கொண்டு காற்று மாசு அதிகமுள்ள நகரங்கள் பட்டியயலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், அதிக மாசு உள்ள 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக தெரியவந்துள்ளது. உலகிலேயே காற்றுமாசு அதிகமுள்ள நகரமாக உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் உள்ளது. இதற்கு அடுத்த இடங்கள் சீனாவின் ஹோடன் நகரத்துக்கும், பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா மற்றும் பைசலாபாத் நகரங்களுக்கும் கிடைத்துள்ளது. இந்தியாவில் டெல்லி, நொய்டா, குருகிராம், கிரேட்டர் நொய்டா, லக்னோ, முசாபர்நகர், பரிதாபாத், பாட்னா, ஹிசார், ஜோத்பூர், மொரதாபாத் உள்ளிட்ட பல நகரங்கள் காற்றுமாசு நகரங்கள் வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் வங்கதேசம் முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 2ம் இடத்திலும், மங்கோலியா 3-வது இடத்திலும் உள்ளன. அப்கானிஸ்தான் 4-ம் இடத்தையும், இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00