பிறப்பு சான்றிதழ் மோசடி வழக்கு - சமாஜ்வாதி எம்.பி., ஆசம் கான், மனைவி மற்றும் மகனுக்கு மார்ச் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

Feb 27 2020 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிறப்பு சான்றிதழ் மோசடி வழக்கில், சமாஜ்வாதி கட்சி எம்.பி., திரு. ஆசம் கான், அவரது மனைவி மற்றும் மகனை, அடுத்த மாதம் 2-ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ராம்பூர் தொகுதி எம்.பி.,யும், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான திரு. ஆசம் கான் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என பல வழக்குகள் உள்ளன. இவருக்கு, தன்ஜீன் பாத்திமா என்ற மனைவியும், அப்துல்லா ஆசம் என்ற மகனும் உள்ளனர்.

எம்.எல்.ஏ.,வாக செயல்பட்ட திரு. ஆசம் கானின் மகன் திரு. அப்துல்லா ஆசம் மீதும், பிறந்த தின ஆவணங்களில் மோசடி செய்ததாக வழக்கு பதிவானது. மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, எம்.எல்.ஏ., பதவியையும் அவர் இழந்து விட்டார். இதற்கி‌‌டையே, கடந்தாண்டு ஜூலையில், திரு. ஆசம் கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனால் நேரில் ஆஜராகும்படி, ராம்பூரில் உள்ள நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை. அவர்களின் முன்ஜாமின் கோரிய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், வழக்கொன்றில், திரு. ஆசம் கான் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. மேலும், அவர்களது சொத்துகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில், திரு. ஆசம் கான், அவரது மனைவி திருமதி. தன்ஜீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா ஆசம் கான் ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை, வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00