டெல்லி வன்முறை சீக்‍கிய எதிர்ப்பு கலவரத்தை நினைவூட்டுவதாக சிவசேனா கட்சி கருத்து - பா.ஜ.க. தலைவர்களின் பேச்சு மிரட்டுவது, எச்சரிப்பது போல் இருப்பதாகவும் கடும் தாக்‍கு

Feb 27 2020 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் தற்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், கடந்த 1984 ல் நடந்த சீக்கிய கலவரத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

டெல்லி வன்முறை தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், டெல்லியில் வன்முறை தூண்டப்பட்டுள்ளதாகவும், வாள், கம்பு, துப்பாக்கியுடன் தெருக்களில் இறங்கி போராடிய மக்களின் ரத்தம் சாலையில் சிதறி கிடக்கிறது என்றும் விமர்சித்துள்ளது. டில்லி நிலையை பார்க்கும்போது, ஒரு திகில் படம் பார்ப்பது போன்றும், கடந்த 1984 ல் நடந்த சீக்கிய கலவரத்தை கண்முன் நினைவுபடுத்துவது போல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. டெல்லியில் சட்ட-ஒழுங்கை பாதுகாப்பதில் மத்திய அரசு தோற்று விட்டது என்பது இதன்மூலம் நிரூபணமாகியிருப்பதாக தெரிவத்துள்ளது. டெல்லி கலவரத்திற்கு யார் பொறுப்பு என்பதை பா.ஜ.க. தெரிவிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. மிரட்டுவது போலவும், எச்சரிப்பது போலவும் சில பா.ஜ.க தலைவர்களின் பேச்சு அமைந்துள்ளதாகவும் சாம்னா நாளிதழ் சுட்டிக்‍காட்டியுள்ளது.

இந்த வன்முறைக்கு பின்புலமாக இருப்பது யார் என உள்துறை அமைச்சகத்திற்கு தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ள சாம்னா, டெல்லி தேர்தலில் தோல்வியடைந்த பிறகு வன்முறை வெடித்திருப்பது மர்மமாக உள்ளது என விமர்சித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00