டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடம் மாற்றம் : காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம்

Feb 27 2020 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் முரளிதர், தால்வாந்த் சிங் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி முரளிதர், மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தாவிடம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார். இதனை தொடர்ந்து நீதிபதி முரளிதர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி மத்திய அரசு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், நீதிபதி முரளிதர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கவில்லை என்றும் மாறாக வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளதாக கூறியுள்ளார். லட்சக்கணக்கான இந்தியர்கள், நேர்மையான நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள பிரியங்கா காந்தி, நீதித்துறைய கட்டுப்படுத்தவும், அதன் மீதான நம்பிக்கையை தகர்க்கவும் மேற்கொள்ளப்படும் அரசின் முயற்சிகள் வருந்ததக்கவை என பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00