ஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு கட்டாய விருப்ப ஓய்வு - சேவைகளை அளிக்‍க முடியாமல் திணறுகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்

Feb 27 2020 8:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்கள் 50 சதவீதம் பேர் கட்டாய விருப்ப ஓய்வில் சென்ற நிலையில் சேவைகளை அளிக்‍க முடியாமல் அந்நிறுவனம் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த பி.எஸ்.என்.எல் நிறுவனம், தற்போது வாடிக்கையாளர் சேவை மையத்தில் கூட பணியாளர் இல்லாமல் திணறி வருகிறது. நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 12 கோடியாகும். பணியாளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரம். இந்நிலையில் தொடர் நஷ்டத்தால், ஊழியர்களுக்‍கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கட்டாய விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம், கடந்த மாதம் 31ம் தேதி, சுமார் 78,500 பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வெளியேறியுள்ள நிலையில், போதுமான தற்காலிக பணியாளர்களும் நியமனம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00