குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை - மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டம்

Feb 28 2020 9:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற இயலாது என மத்திய சட்ட அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த சட்டங்களுக்‍கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்‍கே இடமில்லை என மத்திய சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உத்திரகாண்ட் மாநிலம் டெராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சி எடுக்‍கப்படும் என தெரிவித்ததுடன், பாகிஸ்தான், பங்களதேஷ், அப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாக பாதிக்‍கப்பட்ட சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00