வன்முறையால் நிலைகுலைந்து போன டெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது - புதிய மாநகரக்‍ காவல் ஆணையர் நியமனம்

Feb 28 2020 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் கடந்த 36 மணி நேரத்தில் வன்முறைகள் ஏதும் நிகழாமல், இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும், இருந்தபோதிலும், நிலவரத்தை கட்டுக்குள் வைக்க, 7 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, டெல்லியின் வடகிழக்‍கு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 40-ஐ நெருங்கியுள்ளது. கலவரத்தை தூண்டியவர்கள் என சந்தேகிக்கப்படும் 514 பேரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டத்திற்கு பின்னர், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், டெல்லியில், நிலைமை கட்டுக்‍குள் இருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கடந்த 36 மணி நேரத்தில், அங்கு வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக, 7 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள், டெல்லியின் வடகிழக்‍கு பகுதியில் குவிக்‍கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறை ஆணையராக, ஐ.பி.எஸ். அதிகாரி S.N.Shrivastava நியமிக்‍கப்பட்டுள்ளார். தற்போதைய காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்‍கிற்கு பதிலாக, வரும் ஒன்றாம் தேதி முதல், அவர் செயல்வடுவார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதனிடையே, வடகிழக்‍கு டெல்லியில் கலவரம் நடைபெற்ற பகுதிகளில், பெண்கள் மீது ஏதேனும் அத்துமீறல் நடைபெற்றதா என்பது குறித்து ஆராய, தேசிய மகளிர் ஆணையம், அங்கு ஆய்வு மேற்கொண்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00