69 மணிநேரம் கழித்துதான் விழித்துக் கொள்வதா? - பிரதமர் மோதிக்‍கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி

Feb 28 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில், கலவரம் நடந்த 69 மணிநேரம் கழித்துதான் பிரதமர் திரு. மோதி விழித்துக் கொண்டதாக விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. கபில் சிபல், மக்‍கள் அமைதி காக்‍க வேண்டும் என்ற வேண்டுகோளை, பிரதமர் முன்‍கூட்டியே செய்திருக்‍க வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி கலவரத்தை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த, மத்திய அரசு தவறி விட்டதாக எதிர்க்‍கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. கபில் சிபல், பிரதமர் திரு. மோதியையும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில், கலவரம் நடைபெற்ற 69 மணிநேரம் கழித்துதான் பிரதமர் திரு. மோதி விழித்துக்‍கொண்டு, மக்‍களுக்‍கு அமைதி வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதேபோன்று, டெல்லி காவல்துறைக்‍கு பொறுப்பு வகிக்‍கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, மக்‍கள் அமைதி காக்‍க வேண்டும் என்று ஏன் வலியுறுத்தவில்லை என்றும், பாதிக்‍கப்பட்ட பகுதிகளை, ஏன் நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00