வராட் ரோந்து கப்பலை மத்திய கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்திய கடலோர காவல் படைக்கு ஒப்படைத்தார்

Feb 28 2020 9:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கடலோர காவல்படைக்காக கட்டப்பட்ட வராட் ரோந்து கப்பலை மத்திய கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்திய கடலோர காவல் படைக்கு ஒப்படைத்தார். இந்த நிலையில், இக்கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

வராட் கப்பலில் 11 அதிகாரிகள், 91 வீரர்கள் என மொத்தம் 102 பேர் பணியில் இருப்பார்கள். 2,100 மெட்ரிக் டன் எடையுடன், 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டதாக வராட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. கரைக்குத் திரும்பாமலேயே சுமார் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிநவீன ரக 30 மில்லி மீட்டர் மற்றும் 12.7 மில்லி மீட்டர் துப்பாக்கிகள் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து 20 நாட்கள் கடலில் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுவதற்கான அனைத்து திறன்களையும் இக்கப்பல் கொண்டுள்ளது. மேலும் இரண்டு இயந்திரங்கள் கொண்ட ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை வராட் கப்பலில் அமைக்கப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00