டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்

Feb 28 2020 8:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில், கடந்த 23-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே வன்முறை வெடித்தது. அடுத்தடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதில், தலைமைக் காவலர், உளவுப்பிரிவு அதிகாரி உள்பட 42 பேர் உயிரிழந்தனர். உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா கொலை தொடர்பாக, ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீர் உசைன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 123 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00