இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு - குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த 85 வயது மூதாட்டி உயிரிழப்பு

Mar 26 2020 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 85 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில், யூனியன் பிரதேசங்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 85 வயது மூதாட்டி உயிரிழந்தார். கடந்த 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மேலும் சில உடல்நலக் குறைபாடுகள் இருந்ததாக குஜராத் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, ‍கோவா மாநிலத்தில், 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 627 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 119 ‍பேருக்கும், கேரள மாநிலத்தில், 110 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில், 41 நபர்களுக்கும், குஜராத் மாநிலத்தில், 37 பேருக்கும், தமிழகத்தில், 26 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00