புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல் - முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு

Mar 26 2020 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக புதுச்சேரியில், ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில், முதலமைச்சர் திரு. நாராயணசாமி பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநில எல்லைகளில், வெளி மாநில வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மருந்தகம் மற்றும் பால் விற்பனை நிலையங்களில், ஒரு மீட்டருக்கு ஒருவர் என வரிசையில் நின்று பொருட்கள் வாங்க, பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் திரு. நாராயணசாமி நேற்றிரவு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்தார். மருந்தகங்களில், இடைவெளி ஏற்படுத்த, மருந்தாளுநர்களுக்கு அறிவுரை வழங்கினார். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று திரு. நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. ராகுல் அல்வால் தெரிவித்தார்.

இதனிடையே, புதுச்சேரி அபிஷேக பாக்கம், டி.என். பாளையம் ஆகிய இடங்களில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கள்ளத்தனமாக சாராயம் விற்ற நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் பணமும், ஏராளமான சாராய பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00