ஊரடங்கு காரணமாக ஏப்ரல் 14ம் தேதிவரை ரயில் சேவை நிறுத்தம் : ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்ய ரயில்வே அமைச்சகம் இசைவு

Mar 27 2020 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரயில் பெட்டிகளை தனி மருத்துவ வார்டுகளாக மாற்ற உதவுவதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கொரோனா சிறப்பு வார்டுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ரயில்கள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் பெட்டிகளை தனி மருத்துவ வார்டுகளாக மாற்ற பரிந்துரைந்து தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியுள்ளது. நாட்டில் தற்போது 12 ஆயிரத்து 617 ரயில்கள் உள்ளதாகவும் பயணிகள் ரயில் ஒவ்வொன்றிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் உள்ள தாகவும் இவற்றை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவது மூலம் குறைந்த பட்சம் ஒருகோடி பேருக்கு சிகிச்சையளிக்க முடியும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுளாக ரெயில் பெட்டிகள் மற்றும் கேபின்களை மாற்றுவதற்கான திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே. யாதவ், பொது மேலாளர்கள் மற்றும் பிரதேச ரயில்வே மேலாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00