இந்தியாவில், கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக மாறவில்லை - மத்திய அரசு அறிவிப்பு

Mar 27 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில், கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக மாறவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால், சமூக தொற்று தடுக்‍கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

4 கட்டங்கள் கொண்ட கொரோனா பரவலில், முதல் கட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும், இரண்டாவது கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் பரவுகிறது. மூன்றாவது கட்டம், சமூகத் தொற்று எனப்படுகிறது. இதில், சமூக தொடர்பு மூலமாக வைரஸ் பரவத் தொடங்கும். வெளிநாடு செல்லாதவர்களுக்‍கும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் சமூக தொற்றாக வைரஸ் பரவும். மிகவும் அபாயகரமான இந்த கட்டத்தில்தான் இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் உள்ளன. நான்காவது கட்டம் என்பது நாடு முழுவதும் பரவலாக வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையைக் குறிக்கும்.

இதனிடையே, இந்தியா மூன்றாவது கட்டத்தை எட்டிவிட்டதாக பதற்றம் நிலவுகிறது. ஆனால், இந்தியாவில், கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக மாறவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது என்பதற்கு இதுவரை ஆதாரமில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00