இந்தியாவில் கொரோனா பாதிப்பு அபாயம் இருக்கும் 16 இடங்கள் தேர்வு - மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Mar 31 2020 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அபாயம் இருக்கும் 16 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்குள்ள மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா அதிகம் பரவும் வாய்ப்பு உள்ள, 16 இடங்களை மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இங்குள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள தில்ஷாத் கார்டன், நிஜாமுதீன், கேரளாவின் பத்தனம்திட்டா, காசர்கோடு, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா, மீரட், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் , பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹார், கர்நாடக மாநிலம் பெங்களூரு, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தமிழ்நாட்டில் ஈரோடு ஆகிய இடங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த 16 இடங்களிலும், கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். எனவே இவை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00