ஆந்திராவில் அரசின் கட்டுப்பட்டிற்குள் அனைத்து தனியார் மருத்துவமனைகள் : முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி உத்தரவு

Apr 1 2020 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில், நாட்டிலேயே முதன்முறையாக, அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசின் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்து, ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தினசரி வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆந்திர மாநிலத்தில் 44 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் திரு.ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவுவதைத் பொறுத்து, வருங்காலத்தில் தேவைப்பட்டால் திருமண மண்டபங்கள், கல்லூரிகள், விடுதிகள் போன்றவையும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00