கொரோனா சிகிச்சை மருத்துவர்கள் இறந்தால், ஒரு கோடி ரூபாய் நிவாரணம் - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

Apr 1 2020 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் இறக்‍க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் திரு. அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், தலைமைச் செயலாளர் திரு. விஜயகுமார் தேவ், காவல்துறை ஆணையர் திரு. எஸ்.என். ஸ்ரீவத்சவா உள்ளிட்டோருடன் துணைநிலை ஆளுநர் திரு. அனில் பைஜால் இன்று முக்‍கிய ஆலோசனை நடத்தினார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் தீயணைப்பு துறையினரையும் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்‍ கொண்டார்.

இதனிடையே, டெல்லி முதலமைச்சர் திரு. அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்‍கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இறக்‍க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இவர்கள் அரசுத் துறையை சாராமல் தனியார் துறையை சார்ந்திருந்தாலும் இந்த நிதி உதவி பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00