கொரொனா வைரஸால் ஏற்பட்ட இருளை அகற்ற மக்கள் இன்று இரவு 9 மணிக்கு ஒளியேற்ற வேண்டும் - பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு மீண்டும் வேண்டுகோள்

Apr 5 2020 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரொனா வைரஸால் ஏற்பட்ட இருளை அகற்ற மக்கள் இன்று இரவு 9 மணிக்கு ஒளியேற்ற வேண்டும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோதி மீண்டும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொழில்,வேளாண்மை என ஒட்டு மொத்த உற்பத்தியும் நிறுத்திவைக்கப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 22 ஆம் தேதி மக்கள் தாமாக முன்வந்து ஒருநாள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுமென பிரதமர் மோதி வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து மார்ச் 24 ஆம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோதி அன்றையதினம் நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு கடுமையான,உறுதியான ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த ஊரடங்கு உத்தரவால் பெரும் இன்னல்கள் ஏற்பட்டபோதும் கொரோனாவை ஒழிக்க மக்கள் ஊரடங்கை கடைபிடித்து வந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கின் 10-வது நாளன்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டுவர மக்கள் அனைவரும் தேசம் முழுவதும் ஒன்றுபட்டு நின்று, இன்று இரவு சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு வீட்டின் மின்விளக்குகளை அனைத்து விட்டு அகல்விளக்குகள், மெழுகு வர்த்திகள், டார்ச் லைட்டுகள் மற்றும் செல்பேசி ஃபிளாஷ் லைட்டுகளை ஒளிரவிட வேண்டுமென அழைப்பு விடுத்தார். பிரதமரின் அழைப்பை நிறைவேற்ற மக்கள் காத்திருக்கும் நிலையில் கொரோனாவை வீழ்த்த மக்கள் ஒன்றுபட்டு உறுதியாக நிற்க வேண்டும் என்றும் இன்று இரவு 9 மணிக்கு அனைவரும் ஒளியேற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோதி மக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00