பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பது எப்போது? - வரும் 14-ந் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்

Apr 6 2020 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ல் முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதால் அறிவிக்கப்பட்ட 21 நாள் முழுஅடைப்பு பகுதியளவு நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஏப்ரல் 14-க்கு பிறகு பணிநிறுத்தம் நீட்டிக்கப்பட்டால், மாணவர்கள் கல்வி ரீதியாக எந்த இழப்பையும் சந்திக்காமல் இருக்க அமைச்சகம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு அரசுக்கு மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு.ரமேஷ் போக்ரியால், மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் எந்த இழப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார். பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் மாணவர்களுக்கு நடத்தப்படமால் விடுப்பட்ட தேர்வுகள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00