கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய அரசு தீவிரம் - மத்திய அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோதி

Apr 6 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோதி, மத்திய அமைச்சர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், மருத்துவத்துறையினர், விளையாட்டு பிரதிநிதிகள், ஊடகத்துறையினர், மத அமைப்பினர் என பல்வேறு தரப்பினருடனும் பிரதமர் மோதி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோதி இன்று ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரதமருடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஊரடங்கு முடிவடைந்த பிறகு ஏறப்டக்கூடிய சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும், ஊரடங்கு முடிவடைந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய 10 நடவடிக்கைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. மேலும் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய 10 இடங்கள் குறித்த பட்டியலை தயாரிக்கவும் பிரதமர் மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00